
விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் உள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருவையாறு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியரான பேரம்பலம் பரந்தாமன் (வயது 47) என்ற ஆசிரியரே இவ்வாறு எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
