விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம் – சீமான்
‘விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்’ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், சீமானிடம், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” நான் இப்போது மக்களை சந்திக்கிறேன். எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன், மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
மக்களை சந்திக்கிறது என்பது ரோடு ஷோ நடத்துறது இல்ல. கூட்டி வெச்சு பேசிட்டு போறது. மக்களை சந்திக்கிறது என்றால் மக்களின் பிரச்சனைகளை மக்களுக்காக மக்களோடு நிக்கிறது தான் மக்களை சந்திக்கிறது.
அப்படி சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும். இது வேட்டையாட வர சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தெரிவித்தார்.
