விஜய் செய்த மிகப்பெரிய தவறு இதுதான் – உயிர் தப்பியவரின் வாக்குமூலம்
கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி மக்கள் பலர் பலியான சம்பவத்தில் பத்திரிகையாளர் ஒருவர், விஜய் மேல்தான் முழுக்க முழுக்க தவறு என விளக்கமளித்துள்ளார்.
குழந்தைகள், பெண்கள் என பலர் பலியாகியுள்ளனர். ஆனால் அரசியல் புரிதல் இல்லாத, வெறும் திரைப்பட மோகத்தால் கூடிய கூட்டத்தால் நடந்த கொடூர சம்பவம் இதுவென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பியுள்ள பத்திரிகையாளர் ஒருவர், ஒரு கூட்டத்திற்கு 2 மணி நேரம் காத்திருக்கலாம், ஆனால் 5-6 மணி நேரம் காத்திருக்க சொல்வது என்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டத்தை அதிகரிக்க செய்யவே, பரப்புரையை தாமதப்படுத்துவதாகவும், இது முழுக்க முழுக்க விஜயின் தவறான செயல்பாடுகளால் நடந்த அசம்பாவிதம் என குறிப்பிடுகிறார்.
அந்த கூட்டத்தில் இருந்து உயிர் தப்பியதாகவும், அப்படியான ஒருவகை மோசமான சூழல் மற்றும் திட்டமிடல் இருந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளில் சனிக்கிழமை விடுமுறை என்பதாலையே, சனிக்கிழமை மட்டும் விஜய் பரப்புரை முன்னெடுக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அசம்பாவிதம் நடந்ததன் பின்னர், களத்தில் கட்சியினருடன் ஆறுதலாக இல்லாமல், விஜய் சென்னை திரும்பியுள்ளதும், அவரது அரசியல் முதிர்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.