விஜய்யுடன் இணைந்த செங்கோட்டையன்

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

இது தொடர்பான காணொளியை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் குரல் கொடுத்து வந்தார்.

அத்துடன், தலைமைக்குக் காலக்கெடு விதித்த நிலையிலேயே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்தே அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்தார்.

அத்துடன் நேற்று விஜய்யை நேரில் சந்தித்தும் பேச்சு நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக இன்று அவர் விஜய்யின் கட்சியில் இணைந்துள்ளார்.