விஜய்க்காக கூடும் கூட்டம் வாக்களிக்க வரும் தரப்பு இல்லை – தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக கூடும் கூட்டம் அவருடைய கருத்துக்களைக் கேட்க வரவில்லை, என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுப்பவர் தகவலை சரிபார்த்து எழுத வேண்டும், ஏதேனும் தகவல்களை சரிபார்க்க வேண்டும் எனில் தன்னிடம் கேட்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விஜய்க்காக கூடும் கூட்டம் அவருடைய கருத்துக்களைக் கேட்க வரவில்லை எனவும் அவரை பார்ப்பதற்காகவே வருவதாகத் தமிழிசை சுட்டிக்காட்டினார்.
மேலும், அவருடைய கூட்டத்துக்கு வரும் குழுவினர் வாக்களிக்க வரும் தரப்பு இல்லை எனவும் அவர் கூறினார்.