விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கலை இலக்கிய நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கலை, இலக்கிய நிகழ்வுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் நேற்று முன் தினம் புதன்கிழமை கோப் நிறுவனத்தால் நடத்தப்படும் விசேட தேவையுடைய பாடசாலையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வு திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ.இராஜசேகர் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் எச். எம். திலினி சந்தமாலி, பிரதம நூலகர் ந. யோகேஸ்வரன், நூலக உதவியாளர் உ . ரஜனிக்காந், கோப் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கிருஸ்னி உட்பட பலர் கலந்து கொண்டனர்.