விசேட செய்தி எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று  திங்கட்கிழமை நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, லங்கா டீசல் விலை இரண்டு ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 279 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை ஐந்து ரூபாயால் அதிகரித்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சுப்பர் டீசல் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 323 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெயின் விலை இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோலில் விலையில் எந்தவொரு மாற்றுமும் எற்படாது, முன்னர் விற்பனை செய்யப்பட்ட 294 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படவுள்ளது.