
விசேட சுற்றிவளைப்பு : லுணுகலை பொலிஸ் பிரிவில் 5 பேர் கைது
-யாழ் நிருபர்-
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்பில் லுணுகலை பொலிஸ் பிரிவில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்
கஞ்சா போதைப்பொருளுடன் இருவரும் கசிப்புடன் இருவரும் சந்தேகத்தின் ஒருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
லுணுகலை பல்லேகிருவ ஒப்டன் மற்றும் லுணுகலை பகுதிகளை சேர்ந்த 35.38 .52.48.23 வயதுடைய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்
