
விசேட அறிவித்தல்: அபாய வலயத்தில் உள்ளவர்களுக்கு
அபாய வலயங்களில் இருக்கும் மக்களை அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் ஏற்றி வைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 428 குடும்பங்களிலிருந்து 1,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அபாயமான பகுதிகளில் வசிக்கும் மக்களை எந்த நேரமும் அவர்களின் கைத்தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்து வைக்குமாறு அந்த நிலையம் மக்களை கேட்டுகொண்டுள்ளது.
மேலும் பேரிடர் வேளைகளில் செயற்பாட்டிலிருக்கும் தொலைபேசியைக் கொண்டு எம்மால் உதவ முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலைய பொதுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
