
விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை
விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கடவத்த, கொனஹேன விசேட ஆயுதப்படை முகாமின் ஆயுதங்களுக்கு பொறுப்பான அதிகாரியாக செயற்பட்ட, 59 வயதான அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆயுதத்தினால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
