
விசில் சின்னத்துடன் களமிறங்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்
தமிழ் நாட்டின் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஒரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக ‘பொதுச் சின்னம்’ கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
கட்சித் தலைமை சார்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் சுமார் 10 விருப்பச் சின்னங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அதில் விசில், ஆட்டோ, மட்டைப்பந்து , மடிக்கணினி, கப்பல், மைக்ரோஃபோன் போன்றவை முக்கியமாக இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதில் தவெக தரப்பில் விசில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதில் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
விஜய்யின் ரசிகர்களுக்காகவும், மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதாலும், ‘விசில்’ சின்னம் தவெகவின் முதன்மைத் தேர்வாக அமைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்திய வெளியிட்டுள்ளன.
