விசித்திரமாக வீதிக்கு இறங்கிய பொலிஸார்

வழக்கமாக மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு வீதிக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போக்குவரத்து சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இவ்வாறு சோதனை நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

மஹியங்கனை மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 240 தொழிற்பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் “யுக்திய” நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் சோதனைகளுக்காக பொதுமக்களை சோதனை செய்ய இவ்வாறு ஒன்றிணைந்தனர்.