விகாரையில் வசிக்கும் நபர் செய்த செயல்: பொலிஸாரால் கைது

களுத்துறை பகுதியில் 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது அங்கியில் மறைத்து வைத்திருந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை மத்துகமை பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

வஸ்கடுவை பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான இவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மத்துகமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவித்தனர்.