வா வாத்தியார் திரைப்படத்திற்கு வந்த சோதனை

நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் “வா வாத்தியார்” .

குறித்த திரைப்படம் எதிர்வரும் 12-ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் திரைப்படத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததே இதற்குக் காரணம்.

இதன்படி வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.21.78 கோடி பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வரை, திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், எதிர்வரும் 12-ம் திகதி திரையரங்குகளில் இத்திப்படம் வெளியாவது ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், எந்தவொரு ஓ.டி.டி தளத்திலும் படத்தை வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.