வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று வியாழக்கிழமை பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு திறமைகள் கலை வடிவங்களாக வெளிப்படுத்தப்பட்டதுடன், நடனங்கள், பொலித்தீன் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம், கவிதை, பாடல் என பல்வேறு அம்சங்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.

அத்துடன் மாற்றுத் திறனாளிகளாக இருந்து பல்வேறு சேவைகளில் பெருமை சேர்த்தவர்களுக்கான கௌரவிப்புகளும், கல்வி ரீதியான போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய சிறார்களுக்கான பாராட்டுதல்களும், கலைநிகழ்வுகளை வழங்கியவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

வாழ்வின் உதயம் மாற்றுதிறனாளிகள் அமைப்பின் தலைவர் ச.சஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகஸ்தர் திருமதி ஜெயக்குமார், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் கிராம உத்தியோகஸ்தர், நூலக உத்தியோகஸ்தர், ஒய்வு பெற்ற சமூக சேவை உத்தியோகஸ்தர், சமூகசேவகர் க.யுவராஜன் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.