வாழைப்பழம் சிக்கி வயோதிபர் மரணம்
பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
வெலிகபொல பகுதியை சேர்ந்த பியதாஸ (வயது – 74) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தனது கணவன், உணவு உட்கொண்ட பின் வாழைப்பழம் சாப்பிட்டார். அதன்பின்னர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டார். அக்கம்பக்கத்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில், அவசர, அவசரமாக அழைத்துவந்தோம் எனினும், உயிரிழந்துவிட்டார் என பிரதான சட்ட வைத்தியர் முன்னிலையில் பியதாஸவின் மனைவி சாட்சியமளித்தார்.
இதேவேளை அவர் உட்கொண்ட வாழைப்பழத்தில் ஒரு துண்டு, தொண்டையில் சிக்கியதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக, பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சத்தியா முன்னிலையில் இடம் பெற்ற பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்