வாழைப்பழத் தோலின் நன்மைகள்
🟡🟢வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் வளமையாக உள்ளது. மேலும் அதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. அது மட்டுமன்றி வாழைப்பழத் தோலிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அது என்னென்ன நன்மைகள் என்பதைப் பார்ப்போம்.
🍌வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும்.
🍌சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி, நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
🍌வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.
🍌நுளம்புக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.
🍌வாழைப்பழத் தோலைக் கொண்டு தினமும் பற்களில் ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். இது பற்களை பளிச்சிட வைக்கும்.
🍌வாழைப்பழத் தோலை உடலில் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக தடவும். வலி போகும் வரை ஒரு 30 நிமிடத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் சேர்த்து காய்கறி எண்ணெயையும் கலந்து கொண்டால், இன்னும் சிறப்பாக செயல்படும்.
🍌வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்திலுள்ள சுருக்கம் நீங்கும்.
🍌மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும்.
🍌கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், அந்த இடத்தில் வாழைப்பழத் தோலினைத் தடவலாம். பின்னர் அந்த இடத்தைச் சுற்றி அழுத்தம் கொடுத்தால், எளிதில் முள் வெளியே வந்துவிடும்.
🍌வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற வேதிப்பொருள் நிரம்பியுள்ளது, இது தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பலனை தருகிறது, வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலையும் சாப்பிட்டு வந்தால் தூக்கத்தை தூண்டுகிறது.
🍌வாழைப்பழ தோலில் உங்கள் பெருங்குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
🍌வாழைப்பழ பழ தோல்கள் உங்கள் உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக பச்சை வாழைப்பழ தோல்கள் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது.
🍌கண் வீக்கம் அல்லது வலி இருந்தால், கண்களை மூடி, அதன் மேல் வாழைப்பழத் தோலை வைத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத் தோலில் உள்ள விசேஷ பண்புகள், கண்களுக்கு பல நன்மைகளை தர வல்லவை. தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்கு கம்பியூட்டரில் பணி புரிபவர்கள் இரவு தூங்கும் முன் கண்களை மூடிக்கொண்டு வாழைப்பழத் தோலை கண்களில் வைத்தால், கண்களில் ஏற்பட்டுள்ள சோர்வு நீங்கும்.
வாழைப்பழத் தோலின் நன்மைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்