வாழைப்பழத் துண்டு தொண்டையில் சிக்கியதில் பறிபோன உயிர்

கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் வாழைப்பழத்தின் சிறிய துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹிரிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரியான ஹெட்டி கங்கணமாலையின் லக்ஷ்மன் ஹெட்டி பத்திரன (வயது – 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபர் பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரது மனைவி அவரை கவனித்து வருவதுடன் கடந்த ஆம் திகதி சாப்பாட்டுக்கு பின் வாழைப்பழம் கொடுத்துள்ளார்.சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ​​திடீரென வாழைப்பழத்துண்டொன்று தொண்டையில் சிக்கியதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.