வாழைப்பத்தின் ஆரோக்கிய பயன்கள்

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பயன்கள்

வருடம் முழுவதும் கிடைக்கூடியது வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 வகை கலோரியை இது தருகிறது.இது தவிர வைட்டமின்கள், தாது உப்புகள் இதில் நிறைவாக உள்ளன. வாழையில் உள்ள( பிரக்டோஸ்) போன்ற எளிய சர்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்குறது.

விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும் போது இயற்கையான உடனடி (எனர்ஜி) கிடைக்கும். உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் செரிமான பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின்கள் { B-6 }

🍌இரத்தசோகை போன்ற குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துகொள்ளும். இதய ரத்தகுழாய்பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்பை குறைத்து விடும்.

🍌தாது உப்புகளை பொறுத்தவரையில் { தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ்} ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன.

🍌மெக்னீசியம் எனும் தாது உப்பானது நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது பொருளாக காணப்படுகிறது.

Shanakiya Rasaputhiran

🍌100 கிராம் வாழைப்பழத்தில் 358 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

🍌இது இதய துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பதுஇ இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது பேன்றவற்றை செய்கிறது.

🍌வாழைப்பழம் உட்கொள்ளுவதன் முலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சில ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

🍌நல்ல பார்வையை பராமரிக்க வைட்டமின் ஏ இன்றியமையாத ஒன்றாகும். அதே நேரத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன.

🍌வாழைப்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் பிற கண் கோளாறுகளைத் தடுக்க உதவும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad