வாழைச்சேனை விபத்தில் ஐவர் படுகாயம்
வாழைச்சேனை நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்னர்.
மாங்கேனியிலிருந்து குடும்பமாக முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரில் 30 வயதுடைய தாயார் மற்றும் கைக்குழந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கனரக வாகனத்தில் பயணித்த வாகனத்தின் உதவியாளர் ,முச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற சாரதி உட்பட சிறுவனும் ,காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

