வாழைச்சேனை பகுதியில் மாயமான பெண் கொழும்பில் மீட்பு: ஆசை காட்டி கொழும்புக்கு அழைத்த டிக்டொக் பெண்
வாழைச்சேனை, பிறைந்துருச்சேனை பகுதியில் கடந்த 12 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பெளசுல் பாத்திமா இப்கா (வயது – 17) என்ற இளம்பெண் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார்.
உடல் மற்றும் உயிர் ஆபத்திலிருந்து இப்பெண் மீட்கப்பட்டு தமது வீடு நோக்கி அழைத்து செல்லப்படுவதாக தற்போது கிடைத்த குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளம்பெண்ணை ஆசை காட்டி கொழும்புக்கு வரவழைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களான டிக்டொக் பெண் தரகர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்