வாழைச்சேனையில் வாகன விபத்து
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் மியான்குளம் காட்டு பகுதியில் வாகனம் பாதையை விட்டு விலகி குடை சாய்ந்ததில் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதி.
கெக்கிராவையிலிருந்து இருந்து ஒட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் மீன் கொள்வனவு செய்வதற்காக சிறிய ரக பட்டா வாகனத்தில் வந்தோர் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். கால்நடைகளுக்கு வழி விட்டு முந்தி செல்கையில் பாதையை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.