
வாழைச்சேனையில் வடிசாராயத்துடன் 19 வயது இளைஞன் கைது
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள மீராவோடை தீவுப் பகுதியில் வாழைச்சேனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கோடா எனப்படும் மதுசாரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கோடா அடங்கிய 04 பரல்களுடன் 02 வெற்றுபரல்கள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது 74375 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டாரவின் ஆலோசனைக்கமைய, உப பொலிஸ் பரிசோதகர் ஜீ.ஆர்.எஸ்.அமரபந்துவின் வழிகாட்டலில், மீராவோடை பகுதிக்கு சென்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் 19 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 74375 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டள்ளது.
அத்துடன் மதுசார உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபரினை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


