வாழைச்சேனையில் தவிசாளர்களுக்கு இடையேயான கலந்தாய்வுக் கூட்டம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களுக்கு இடையிலான கலந்தாய்வுக் கூட்டம் இன்று ஞாயிற்றுகிழமை வாழைச்சேனை கறுவாக்கேணியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாதின் கோறளைப்பற்று அரசியல் பணிமனை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்தாய்வுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது உள்ளூராட்சி சபைகள் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் அவற்றைத் தீர்ப்பதற்காகவும் சபைகளின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவும் முன்னெடுக்கப்பட வேண்டிய வழிவகைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

