
வாழைச்சேனையில் சிறுவர் தின நிகழ்வு
-கிரான் நிருபர்-
எல்லாவற்ரையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள் எனும் தொனிப்பொருளில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி .ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது
இதன் போது சிறுவர்களின் பேச்சு, கவிதை, குழுநடனம், வீதி நாடகம் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இதனைத் தவிர,பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேலும் மாவட்ட ரீதியில் வெற்றியீட்டிய சிறுவர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு உபகரணங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அதிதியாளக கல்குடா வலய பிரதி கல்வி பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன், M.S.மதன் சுகாதார வைத்தியர் அத்தியஸ்தர், ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை மாற்றும் S.M.L.R பண்டா பொலிஸ் பொறுப்பதிகாரி S.நவநீதன் செயலாளர் – கோறளைப் பற்று பிரதேச சபை, MM.அப்துல் றவுப் நன்நடத்தை பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் .R.கங்காதரன், திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் திருமதி.க.தேவமனோகரி சமுர்த்தி முகாமையாளர், R.பிரேம்சந்திர முகாமையாளர், இலங்கை வங்கி வாழைச்சேனை அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கோறளைப்பற்று வாழைச்சேனை அலுவலக உத்தியோகத்தரர்கள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என மலர் கலந்துகொண்டனர்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

