வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: 8 பேர் வைத்தியசாலையில்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடைப் பகுதியில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 8 பேரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மோதலில் ஈடுபட்ட இரு குழுவிலும் 30 நபர்கள் உள்ளடங்குவதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்