வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

மொரட்டுவை லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதே பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

வாக்குவாதத்தின் போது குறித்த நபர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.