வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலி

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த எச்.கே. பிரசன்ன குமார (வயது – 39) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொலையுடன் செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் வசிக்கும் 5 பேர் தொடர்புபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளிகள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்