வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்து நாடு திரும்பிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த தேவா, பிரசன்னா ஆகியோரின் சகாவே இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த போது யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலமையிலான குழுவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.