வாளொன்றுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை வாளொன்றுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞர் 3 அடி நீளமான வாளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.