‘வாலாஸ் கட்டாவின்’ தப்பிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது

போதைப்பொருள் கடத்தல்காரர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய சகாவான திலின சம்பத் அல்லது ‘வலஸ் கட்டா’ என்பவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டதாகவும், மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஒரு மருத்துவ அதிகாரி நோய்க்கான மருந்தைக் கொடுக்கத் தயாரானபோது, ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கையில் கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் ‘வலஸ் கட்டா’ என்பவர் சமீபத்தில் மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.