வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி (வயது – 37) என்ற 03 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.