வானிலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மத்திய வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக மறுஅறிவித்தல் வரை அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாமெனக் கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்