
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று இரவு 11.30 மணி வரையில் குறித்த வானிலை எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

