கம்பளையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

கம்பளை – தொலுவ வீதியில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது  அந்த வீதியில் பயணித்த மூன்று பெண்கள்   உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.