வாந்தி எடுத்த பெண்: தம்பதி கைது

மாத்தறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த தம்பதியினர் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட போது பெண் தன்னிடம் இருந்த ஹெரோயின் கட்டிகள் இரண்டினை விழுங்கியுள்ளார்.

இது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேக நபரான அப்பெண் மாரவில சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதன் போது அவர் வாந்தி எடுக்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணிடம் இருந்து 01 கிராம் ஹெரோயின் கட்டிகள் 2 மீட்கப்பட்டுள்ளது.