வாடகை காரை விற்பனை செய்ய முயன்றோர் கைது

கம்பஹாவில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து வாடகை அடிப்படையில் குறித்த கார் பெறப்பட்டு உதிரி பாகங்களுக்காக விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.