வாடகை காரில் ஏற்றி சென்று கொலை செய்யப்பட்ட இளைஞன் : எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

துனுமடலாவ வனப்பகுதியில் பல மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த எலும்புக்கூட்டு எச்சங்களானது மார்ச் 21 ஆம் திகதி காணாமல் போன ஒரு இளைஞனுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இளைஞன் மதவாச்சி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உயிரிழந்த இளைஞன் ஒரு குழுவினரால் வாடகை கார் ஒன்றில் கடத்தி செல்லப்பட்டு விடுதி ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் துனுமடலாவ வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க