வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அலை கலை வட்டத்தின் புதிய வேலை திட்டம்

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அலை கலை வட்டத்தின் புதிய வேலை திட்டம்

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் இலக்கியத்துறையில் இளையோர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பாடசாலை நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கான புத்தகங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் செயல்பட்டு வருகின்றனர்.

சமூக முன்னேற்றத்திற்கான இப்பணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் தங்களிடமுள்ள புத்தகங்களை அன்பளிப்பு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆர்வமிருப்பின் புதிய அலை கலை வட்ட மகளிர் அணி செயலாளர் பிரியதர்ஷினி விக்னேஸ்வரனுடன் தொடர்பு கொள்ளவும். (தொ.பே 076 3939140)

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News