வாக்கெடுப்பில் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பிற்காக தற்போது முன்னிலையாகியுள்ள எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கப்போவதில்லை, என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எதிர்வரும் ஜுலை 20ஆம் திகதி நாடாளுமன்றில் புதிய ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
