வாக்கெடுப்பின்றி நிறைவேறியது 500 பில்லியன் மதிப்பீடு

திடீர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் மேலதிக மதிப்பீடு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எவ்வித வாக்கெடுப்பும் இன்றி அங்கீகரிக்கப்பட்டது.

இந்த மேலதிக மதிப்பீட்டை பிரதமர் நேற்று  வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இது தொடர்பான விவாதம் இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.10 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

விவாதத்தின் முடிவில், சபையில் வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாமல் ஏகமனதாக இந்த நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இடர் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், அவர்களின் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்குமே இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இதற்கான மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.