வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்

 

-திருகோணமலை நிருபர்-

 

திருகோணமலை -நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மாதாந்த பரிசோதனையின் போது புல்மோட்டை உதவி அத்தியட்சகர் (ASP)) சந்தன பஸ்நாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மே மாதத்திற்கான மாதாந்திர ஆய்வு நடத்தப்பட்டபோது, காயமடைந்தவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட அலுவலர்கள் தனி வரிசையில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிற்கும் வரிசையில் குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜண்ட்டும் நின்றுள்ளார்.

அந்த வரிசையில் நிற்பதற்கு குறிப்பிட்ட சார்ஜண்ட் அனுமதி பெறவில்லை என்றும், அவரது காலணிகள் மற்றும் பெல்ட் போன்றவையும் பொலிஷ் செய்யப்படவில்லை என்றும் ஏஎஸ்பி சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த சார்ஜண்ட், ஏஎஸ்பியை நோக்கி கத்தி சத்தமிட்டுள்ளார்.

‘இது ஒரு தவறா? எங்களுக்குள்ள பிரச்னைகள் எங்களுக்கு மட்டும்தான் தெரியும், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், என்னை சஸ்பெண்ட் செய்யுங்கள், நான் பயப்படவில்லை.’ என உரத்த குரலில் சத்தமிட்டுள்ளார்.

பின்னர், சார்ஜன்ட்டின் நடத்தை குறித்து உதவி கண்காணிப்பாளர் செய்த புகாரின் பேரில், திருகோணமலை எஸ்.எஸ்.பியினால் அந்த சார்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்