வாக்குச்சீட்டை படம் பிடித்தவர் கைது

புத்தளம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை வாக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலங்குடாவ பெய்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்களிப்பு நிலையத்தில் தனது விருப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் அதனை புகைப்படம் எடுத்த ஒருவர் ஆலங்குடா முஸ்லிம் கல்லூரியின் மண்டபம் இலக்கம் 1 வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்களிப்பு நிலையத்தின் சிரேஷ்ட நிலைய பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.