
வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலே சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் கூறினார்!
பாதீடு ஒன்று முன்வைக்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கிய சந்தர்ப்பத்திலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவ்வாறான கருத்தை முன்வைத்திருந்ததாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
