வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன.
அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில் குறித்த வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 8,000 பேரைக் கடமைகளில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
