
வாக்களிப்பு நிலைய கழிவறையிலிருந்து சடலம் மீட்பு
குருநாகல் மாவட்டத்தின் கொபேகனே, பனாம முஸ்லிம் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கழிவறைக்குள் உயிரிழந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த, விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளராக கடமையாற்றிய ஏ.எம்.அஸீம் (வயது – 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த குணவர்தன மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமின குமார ஆகியோரின் பணிப்புரைக்கமைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபேகனே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார மேற்கொண்டு வருகின்றார்.
