வாகரை-கதிரவெளியில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

 

இலங்கை தமிழரசுகட்சியின் வாலிபர் முன்னனி உறுப்பினர்களின் நிதி பங்களிப்புடன் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் கதிரவெளி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பிரதேச மக்கள் வாலிபர் முன்னனியிடம் முன்வைத்த கோரிக்கையினையடுத்து இந்த உதவி திட்டம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் வாலிபர் முன்னனி தலைவர் க.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாலிபர் முன்னனி உறுப்பினர்கள், கதிரவெளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பிரதேச கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.