வாகரை – கட்டு முறிவில் போக்குவரத்து பாதிப்பு – மக்கள் விசனம்

வாகரைப கட்டு முறிவுக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை மற்றும் பெய்து வரும் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வடிகான்கள் அமைத்து சீரமைக்கும் பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் கட்டு முறிவுக் கிராமத்தில் ஒரு பேருந்து மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வீதியில் சீரமைக்கும் பணியினால் பேருந்து பயணம் செல்ல முடியாமல் புதைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது போன்று பல வீதிகள் மோசமான நிலையில் உள்ளதனால் இதனால் மக்கள் அசௌகரியங்க ளைச் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறான பிரச்சனைகளை கலா காலமாக மக்கள் சந்த்தித்து வருவதாகவும் இவ்வாறு சீரமைக்கும் பணிகளை மழைக்காலங்களில் மட்டுமே முன்னெடுப்பதால் பயணம் செல்லும் பாதை முற்றாக சேதமடைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த பணியினை உரிய காலங்களில் முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.