
வாகன விபத்து: 8 வயது குழந்தை பலி
மாத்தறை பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கி 8 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்ததில் சாரதியின் பின் இருக்கையில் பயணித்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது சிகிச்சை பலனின்றி 8 வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய நிலையில் பொலிஸாரரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
