வாகன விபத்து 3 பேர் காயம்

பொகவந்தலாவ நோர்வூட் சென் ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒன்றரை வயதுடைய குழந்தை உள்ளிட்ட மூவரே காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.